140 வருடங்களுக்கு பின்னர் இலங்கையில் அதிக வெப்பத்துடனான வானிலை தற்போது நிலவுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான புள்ளிவிபரங்களை ஆராய்ந்ததில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், எல்நினோவின் தாக்கமும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கடந்த
30 வருடங்களில் காணப்பட்ட நாட்டின் சாதாரண வெப்பநிலையானது 2 முதல் 3 பாகை செல்ஸியஸ் வரை அதிகரித்துள்ளது.