முஸ்லீம் மக்களை பயங்கரவாதிகளாகப் பாராது அவர்களை பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் மக்கள் பயங்கரவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரை வலுவிழக்க செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக தாம் முன்னின்றதன் காரணமாகவே அண்மைக்காலமாக தமக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டிலிருந்து கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சில பிரதி பொலிஸ் மா அதிபர்கள் பொருட்படுத்தவில்லை என அவர் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.