வடமாகாண ஆளுநரை சந்தித்து பேச்சு நடத்தும் நிலையில் தாம் இல்லை என ஆவா குழுவின் பெயரில் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
ஆவா குழுவை சந்தித்து பேச்சு நடத்த தயார் எனவும் , அதற்காக தான் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அவர்கள் கூறும் இடத்திற்கு சென்று பேச்சு நடத்த தயார் எனவும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆவா குழுவின் பெயரில் , வடமாகாண ஆளுநருக்கு 17ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
அதில் இன்றைய சூழ்நிலையில் எங்களை உங்கள் மத்தியில் அடையாளம் காட்டிக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி – vanni