தென்னிந்திய சினிமா போல இல்லாமல், நடிகைகள் எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என பாலிவுட் சினிமாவில் ஒரு எழுதப்படாத விதி உள்ளது.
கீர்த்தி சுரேஷ் ஹிந்தி சினிமாவில் நடிக்க எவ்வளவு ஒல்லியாக மாறியுள்ளார் என பார்க்கும்போதே இது புரியும்.
தமிழில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே பாலிவுட்டிலும் அதிகம் பிரபலம்.
அவர் 2012ல் வந்த விக்கி டோனர் என்ற ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாராம்.
ஷூட்டிங் முன்பு இவர் ஒருமாதம் விடுமுறைக்கு வெளிநாடு சென்றுள்ளார். அப்போது அதிகம் பீர் குடித்தாராம், கண்டபடி உணவு சாப்பிட்டாராம். அதனால் அவர் உடல் எடை சில கிலோ கூடிவிட்டதாம்.
அதை பார்த்த இயக்குனர் இவரை படத்தில் இருந்தே நீக்கிவிட்டனராம்.
நன்றி – KISUKISU