செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியா பிரதேச செயலகத்தின் முக்கிய ஆவணங்களை தீயிட சதித்திட்டம்

வவுனியா பிரதேச செயலகத்தின் முக்கிய ஆவணங்களை தீயிட சதித்திட்டம்

1 minutes read

தொடர்புடைய படம்

வவுனியா பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு எதிராக காணி அபகரிப்பு தொடர்பான பல முறைப்பாடுகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் அனுப்பபட்டிருந்தது.அந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அதிரடியாக கொழும்பில் இருந்து களமிறங்கிய விசாரணை பிரிவு இரவு பகலென  மூன்று நாள் விசாரணையை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளனர்.

பிரதான முறைப்பாடு வழங்கியவரிடமிருந்து 9 மணித்தியாலத்திற்கு அதிகளவான நேரம் வாக்குமூலத்தை இருவேறு சந்தர்பங்களில் விசாரணை குழு பெற்றிருந்ததது.அது தொடர்பான பல ஆவணங்களும் வவுனியா பிரதேச செயலகத்தில் இருந்து அதிகாரிகளால் கொழும்புக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தது.

ஆயினும் சாட்சியம் மற்றும் வாக்கு மூலம் வழங்கிய பிரதான முறைப்பாட்டாளரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் அவரது வயல் நிலங்களும் எரியூட்டப்பட்டது ஊழல் தொடர்பான முக்கிய விடயங்களை வெளிக்கொண்டு வந்த நபருக்கு இவ்வாறான தாக்குதல் நடாத்தப்பட்ட விடயம் வவுனியா வாழ் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் உள்ளடங்கலான மூன்று நபர்கள் இரகசியமாக தமது சாட்சியங்களை முன்வைத்தனர்.காணி அபகரிப்புக்கு மேலதிகமாக அதிகாரிகளின் பல்வேறு மோசடிகள் தொடர்பாகவும் இதன் போது சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இருந்தும் சாட்சியங்களை அழிப்பதற்கு பிரதேச செயலாளர் முயல்வதாகவும் திட்டமிட்ட தீ விபத்து ஒன்றினை உருவாக்கி முக்கிய ஆவணங்களை அழிப்பதற்கு இரகசிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More