சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட பிரசவ மற்றும் பெண்ணியல் விவகார வைத்தியர் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக முறைப்பாடளித்த இரு பெண்கள் தற்போது கர்ப்பம் தரித்துள்ளனர்.
தாம் வைத்தியர் ஷாபி ஊடாக சிசேரியன் சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவ்வாறு சிசேரியல் செய்யப்பட்டு அடுத்த குழந்தையைப் பெற கடந்த இரு வருடங்களாகியும் குழந்தை கிடைக்கவில்லை எனவும் அதனால் தாம் வைத்தியரால் கருத்தடை செய்யப்பட்டுள்ளோமா என சந்தேகம் எழுவதாகவும் அந்த இரு தாய்மாரும் முறைப்பாடளித்துள்ளனர்.
அவர்களது முறைப்பாட்டை பதிவு செய்த சி.ஐ.டி., பின்னர் அவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து அறிவிக்க தொலைபேசியில் அழைத்துள்ளனர். அப்போது அவ்விரு தாய்மாரும், ‘ சேர்…. எமக்கு அந்த சோதனைகளை அவசியமில்லை…நாம் கர்ப்பம் தரித்துவிட்டோம்.’ என பதிலளித்ததாக சி.ஐ.டி. அதிகாரிகள் கூறினர்.