வ.மா முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் முயற்சியினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேமமடு கிராமிய வைத்தியசாலையின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
2017ம் ஆண்டில் அப்போதைய மாகாண சுகாதார அமைச்சரான மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் கிராமிய சுகாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சேமமடுவில் கிராமிய வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
எனினும் அமைச்சரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் கட்டுமானப்பணிகளை தொடர நிதி பற்றாக்குறை நிலவியது. இதனால் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக கட்டுமான பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பில் பிரதேச மக்கள் முன்னாள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து தேசிய கொள்கைகள் திட்டமிடல் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிடம் ரூபா 5 மில்லியன் நிதி முன்னாள் அமைச்சரின் சிபார்சின்பேரில் கிடைக்கப்பெற்றதையடுத்து தற்போது கட்டுமான வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வணக்கம் லண்டனுக்காக தீபன்