ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றே இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அத்தோடு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, முரளி அரசியலில் களமிறங்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவொரு உண்மையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவளிக்க வேண்டும். இலங்கை அபிவிருத்தியடைய வேண்டுமென்றால், கோட்டாபய போன்று ஒருவர் எமது நாட்டிற்கு தலைவராக வேண்டும் என்றே அவர் கூறினார்” என மேலும் தெரிவித்தார்.