0
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு வலிமை என்ற தலைப்பு கிடைத்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமார் வக்கீலாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் குவித்தது. இதைத்தொடர்ந்து “அஜித் சிறந்த நடிகர், அவருடன் மீண்டும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று போனிகபூர் அறிவித்தார். தற்போது புதிய படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார்.
இப்படம் எளிமையான பூஜையுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. இப்படத்திற்கு ‘வலிமை’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு வலிமை என்ற தலைப்பு கிடைத்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வலிமை என்ற தலைப்பு கெனன்யா பிலிம்ஸ் உரிமையாளரான செல்வகுமாரிடம் இருந்ததாக கூறப்படுகிறது.
தல 60 படத்திற்கு வலிமை என தலைப்பு வைக்கலாம் என தீர்மானித்த படக்குழு, அந்த தலைப்பை பயன்படுத்த அனுமதிகோரி செல்வகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தீவிர அஜித் ரசிகரான செல்வகுமார், மறுப்பு தெரிவிக்காமல், தலைப்பை பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளார்.