அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது நட்டு பிரஜைகளை அவதானமாக இருக்கும்படிஅறிவுறுத்தியுள்ளது.
தற்போது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் விடுக்கப்பட்ட 2ஆவது நிலை பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கூட்டங்கள்,ஆர்பாட்டங்கள்நடைபெறுமிடங்களில் செல்லும் பொது அவதானமாகஇருக்கும்படி கூறியுள்ளது.
அத்தோடு உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள்உள்நாட்டு ஊடகங்களின் தகவல்கள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.