ஈழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு விழி நீரால் விளக்கேற்ற தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாராகி வருகின்றன. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னதாகவே கடந்த மாத்தில் இருந்து மாவீரர் நாள் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டில் எத்தகைய அடக்குமுறைகள் ஏற்பட்டாலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறும் என்பதனை தாயகத்து மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் ஏற்பாட்டு பணிகளை மாவீரர் பணிப் பொதுக்குழு மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை, முழங்காவில் துயிலும் இல்லம், வடமராட்சி சாட்டி துயிலும் இல்லம், யாழ் தீருவில் துயிலும் இல்லம், அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லம் உள்ளடங்கலாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்நாள் ஏற்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை இன்றைய தினம், கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.