சிறந்த முகநூல் பதிவுகளை வெளியிடும் தொடரில் இவ்வாரம், பழ. றிச்சர்ட் பதிவு
கோட்டாபாயவை போர்க்குற்றங்களுக்கும், இனவழிப்புக்கும் தனிப்பொறுப்பாளியாக்கும்
வேலையை பலரும் செய்து வருகின்றார்கள்.
இலங்கையில் போர்க்குற்றமும், இனவழிப்பும் தனிமனிதனொருவனின் குரூரத்தனத்தாலும், நெறிப்பிறழ்வாலும் நடந்ததல்ல.
இதற்கு ஒரு கட்டமைப்பும்இ கோட்பாட்டு பின்புலமும், வரலாறும் இருக்கின்றது. கோட்டபாய என்ற தனிமனிதனை குற்றவாளியாக்கி விடுவதன் மூலம் எம்மை அழித்த கட்மைமைப்பையும்,கோட்பாட்டையும் தப்பி செல்ல அனுமதித்து விடுகின்றோம்.
இது நாளை இன்னுமொரு கோட்டபாயவை தேடி பிடித்துக் கொள்ளும். எமது திட்டம் இனவழிப்பு கோட்பாட்டையும்இ கட்டமைப்பையும் அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதன் மூலம் தான் எமது தேசிய அந்தஸ்த்தை நிலைநாட்டும் தேவைப்பாட்டை நியாயப்படுத்த முடியும்.
தனியே தனிமனிதர்களை குற்றவாளியாக்கி தண்டிக்கும் போதுஇ நாம் எதற்கும் உதவாத சட்ட நீதியை பெறலாம், மனமகிழ்வை பெறலாம். தீர்வு என்பதை தேட முடியாது.
கோட்டபாய இனவழிப்பின்இ போர்க்குற்றத்தின் ஒரு சாட்சி மாத்திரம் தான். அவரை சாட்சிக் கூண்டில் ஏற்றுவது தான் எமது வேலைதிட்டமாக இருக்க வேண்டும். அவர் மூலமாக இனவழிப்பின் அரசியலின் கட்டமைப்பையும்இ கோட்பாட்டையும் அம்பலப்படுத்த முடியும்.
கோட்டபாயவை தனி குற்றவாளியாக்கி – பொறுப்பாளியாக்கி விட கூடாது. எப்போதும் தனிமனிதர்களால் ஒடுக்குமுறையை சாதிக்க முடியாது. ஒடுக்குமுறைகளின் பின்னால் அதை சாதிப்பதற்கான கோட்பாடும், கட்டமைப்பும் இருக்கும். அதன் மீது தாக்குதல் தொடுக்கும் போது தான் எமக்கான தீர்வையும் , விடுதலையையும் தேடலாம்.
இந்த கட்டமைப்பிற்குள்ளும், கோட்பாட்டுக்குள்ளும் ஆழமாக செல்ல பலர் விரும்புவதில்லை. இதற்கு காரணமும் உண்டு.
கொஞ்சம் உள்ளே சென்றால் இந்த கட்டமைப்பில் நம் புரட்சி தோழர் அணுரகுமார இருப்பதை காணலாம். சனநாயக காப்பாளன் சஜித் இருப்பதையும் காணலாம். சமாதான தூதுவர் எரிக் சொல்கெயும் இருப்பதையும் காணலாம். ஏன் நம் தோழர் டக்களசும் இருப்பார்.. சில சமயம் நாமும் இருப்பதையும் கண்டு கொள்ளலாம்.
இதற்கெல்லாம் எதிராக ஒரு தரப்பு இருக்கும். அவர்களை நாம் போராளிகள் என்போம். அவர்கள் பயங்கரவாதிகள் என்பார்கள்.
இலங்கையில் ஏனைய தேசிய இனங்களை அழிக்கும் சிங்கள பேரினவாதத்தின் கட்டமைப்பையும், கோட்பாட்டையும் இனம் கண்டு எதிர்த்து போராடாமல் எம்மால் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாது.
இதை செய்யாமல், கோட்டபாய என்றவொருவரை மாத்திரம் குற்றவாளியாக்கி தீர்வு தேட முயல்வது ஆக்டோபசின் தலையுடன் சண்டையிடாமல்இ பல வால்களில் ஒரு வாலுடன் சண்டை போடுவதற்கு சமனானது.
வால்களை சமாளித்து தலையுடன் மோதும் தந்திரத்தை நாம் கற்றே ஆகவேண்டும்.
பழ றிச்சர்ட், பத்திரிகையாளர் அரசியல் செயற்பாட்டாளர்.