வட மாகாண ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக வட மாகாண ஆளுநராக முரளிதரன் நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில், முரளிதரன் அதனை நிராகரித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (25) இரவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து முரளிதரன் இணக்கம் வெளியிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் முரளிதரன் ஆளுநராக நாளை (27) பதவியேற்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரளிதரனை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.