கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அனாவசியமாக வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் அதிகளவிலான சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, அரைசொகுசு பஸ் சேவையை நிறுத்துவது தொடர்பில் கவனம் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு கூறியுள்ளது.
பயணிகளுக்குத் தேவையான வசதிகளை பூர்த்திசெய்யாத பல பஸ்கள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதிக கட்டணத்தை செலுத்தும் பயணிகளுக்குத் தேவையான உயர்தர சேவைகளை வழங்காத பஸ்களை இணங்காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்படும் என வும் தெரிவித்துள்ளது.