ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,எதிர்க்கட்சி தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளவருடன் கட்சித்தலைவர் இணைந்து இந்த விடயங்கள் குறித்து செயற்படுவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம்கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.