பிரபல போதைப்பொருள் கடத்தற்காரரான, ‘களு துஷார’ எனப்படும் ஹேரத் முதியன்செலாகே துஷார என்ற நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) மரண தண்டனை விதித்துள்ளது.
25.77 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை, கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, ஹேரத் முதியன்செலாகே துஷாரவிற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவினரால், 2017 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பு – சேதவத்தை பிரதேசத்தில் மோட்டார்சைக்கிளில் அவர் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், 59 கிராம் ஹெரோயின் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.