இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி, சர்வதேச ஆதரவுடன் வடக்கு- கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே ஒரே தீர்வாக அமையும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நடைபெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைக்கு சர்வதேச தீர்வை நாம் கோருகின்றோம்.
இப்போது அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்த வெளியேறப்போவதாக கூறுகின்றனர்.
2ஆண்டுகள் கால நீடிப்பை அரசுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே பெற்றுக்கொடுத்தது. இப்போது அந்த காலம் இந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைகிறது.
இந்நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி, சர்வதேச ஆதரவுடன் வடக்கு- கிழக்கை பிரிப்பது மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரே தீர்வாக அமையும்” என மேலும் தெரிவித்தார்.