0
கிளிநொச்சி பரந்தன் இளைஞர் வட்டத்தின் பொங்கல் நிகழ்வு வெகு சிறப்பாக இன்று இடம்பெற்றது. தமிழர் திருநாளாம் தைத் திருநாள் நிகழ்வுகள், தமிழர் தாயகம் எங்கும் பண்பாட்டு உணர்வுடன் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் இன்று பரந்தன் இளைஞர் வட்டத்தினர் பரந்தன் விளையாட்டு மைதானத்தில் பொங்கல் நிகழ்வை முன்னெடுத்தனர். இதில் பிரதேச இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.