சீனாவின் ஹூவான் நகரிலுள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் உடனடியாக அங்கிருந்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதனுடன் சம்மந்தப்பட்ட துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஹூவான் நகரிலிருந்து இருந்து வெளியில் செல்வதற்கும் ஏனைய பகுதியில் இருந்து குறித்த நகரிற்கு உள்நுழைவதற்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இலங்கைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் ஊடாக அவர்களை அழைத்து வருவதற்கு பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹூவான் நகரில் தங்கியிருக்கும் 32 இலங்கையர்களை அங்கிருந்து அழைத்து வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனாலும் குறித்த இலங்கையர்கள் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் பதில் தூதுவர் கே.கே.யோகாநந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.