எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு காலங்கடந்தாலும் நீதியை பெற்றே தீருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் அவர்கள் தெரித்துள்ளார்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன்அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றுகையில் தமிழ் சமூகத்தை அழிவில் இருந்து மீட்க வேண்டிய பொறுப்பு எல்லோரிடமும் உள்ளது.
எங்களுடைய தமிழ்ச் சமூகம் போருக்குப்பின்னர் சிதைவுன்டிருக்கின்ற நிலையில் இருந்து மீண்டெழுவதற்கு எடுக்கின்ற பலவிதமான முயற்சிகளை முன்னெடுக்கின்றபோது இந்த முயற்சியும் தேவையான ஒரு முயற்சியாக இருக்கின்றது.
தமிழ் இனத்திற்கு எதிராக காலத்திற்கு காலம் அநீதிகள் இழைக்கப்பட்டன. எங்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும்.
இன்றும் நீதியை தேடுகின்ற சமூகமாக நாங்கள் இருக்கின்றோம் அதிலும் கவனமாக அதைக் கைவிடாதவர்களாக இன்னமும் இருக்கின்றோம்.
காலம் கடந்து செல்கின்றது எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு காலங்கடந்தாலும் நீதியை பெற்றே தீர்வோருவோம் எனத் தெரிவித்துள்ளார்.