0
பதுளை – கைலகொட பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான பெண் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பதுளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.