செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பிக்பாஸ், தர்சனின் முகத்திரையை கிழிக்க பகிரங்க மோசடி புகார்!

பிக்பாஸ், தர்சனின் முகத்திரையை கிழிக்க பகிரங்க மோசடி புகார்!

1 minutes read

பிக்பாஸ்,பிரபலம் இல்லாதவர்களை பிரபலமாக்குவதற்காக நடத்தப்படும் 100 நாள் வேலை வாய்ப்பு நிகழ்ச்சியான இதில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் இளம் நடிகர் தர்சன்.

இவர் திருமணம் செய்து கொள்வதாக நிச்சயதார்த்தம் செய்து வாழ்க்கையையே கெடுத்து விட்டதாக, சனம் செட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு, மாடலாக இருந்த போதே நடிகை சனம் செட்டியை காதல் வலையில் வீழ்த்திய தர்சன். அவரின்  உதவியுடன்  சிறு சிறு விளம்பரங்களுக்கு மாடலாக இருந்து வந்த நிலையில்  3 வருட காதலின் பின் ஒரு வருடத்திற்கு முன்பு சனம் ஷெட்டியை திருமணம் செய்வதாக நிச்சயம் செய்து கொண்டார் தர்சன்.

சனம் செட்டியுடன் கமிட்டான நிலையில் சிங்கிள் என பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த தர்சன், பல ரசிகர்களின் மனம்கவர்ந்த ஒருவரானார்.

பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை தவறவிட்டாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமான தர்சன் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றதால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பின்னர் சனம் செட்டியை சந்திக்காமல் தவிர்க்க தொடங்கியதோடு, நடிகை ஷெரீன் உடன் நெருக்கம் காட்டியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் விளம்பரம் படங்கள் மட்டுமல்லாமல் திரைபட வாய்ப்புகளும் தர்சனுக்கு கிடைத்ததால், ஒரு கட்டத்தில் சனம் செட்டியை கழட்டிவிட்டதாக கூறப்படுகின்றது.

சனம் ஷெட்டி நடிக்கும் படங்களின் நாயகர்களுடன்தவறான உறவு  கொள்வதாக தர்சன் சுமத்திய குற்றச்சாட்டுத்தான், இவர்களுக்கிடையேயான காதல் முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் தர்சன் பிக்பாஸ் நெருக்கத்தால் ஷெரீனுடன் காதல் கொண்டார் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜோடியாக சுற்றி திரிந்தனர். தர்சனுக்கு பெண்கள் பழக்கம் அதிகரித்ததால் ஒரு கட்டத்தில் ஷெரீனும் கழட்டி விட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில்  புதிதாக மலேசிய பெண் ஒருவர் சிக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இருவரிடையே நெருக்கம் அதிகரித்து வந்த நிலையில் தான், தர்சன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பகிரங்க மோசடி புகார் அளித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More