நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வென்று, அந்த அணியை அதன் சொந்த மண்ணில் ‘வயிற் வோஷ்’ செய்து இந்தியா சாதனை படைத்தது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் 4 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி வென்று முன்னிலை வகித்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி, மவுன்ட் மவுன்கனோய் (( Mount Maunganui)) பகுதியில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 60 ரன்களும், கே.எல். ராகுல் 45 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 33 ரன்களும் சேர்த்தனர்.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி விளையாடியது.
4 பேர் ஒற்றை இலக்க ரன்னிலும், 2 பேர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகியும் வெளியேறியதால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே நியூசிலாந்து அணியால் எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக சைபெர்ட் 50 ரன்களும், டெய்லர் 53 ரன்களும் எடுத்தனர்.
இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வென்று, 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்த் அணியை அதன் சொந்த மண்ணில் 20 ஓவர் போட்டித் தொடரில் இந்தியா ஒயிட் வாஷ் செய்தது.
கடந்த உலக கோப்பை போட்டியில், அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்ததற்கு இந்திய அணி 5-0 என ‘வயிற் வோஷ்’ செய்து பழிதீர்த்து கொண்டது.
இதுவரை இந்திய அணி டி20 தொடரை வென்றதில்லை என இருந்த நிலையில், தொடரையும் வென்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது.