சென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ஆம் திகதி வந்த எம்.வி. மேக்னட் கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும் அவர்களிடம் துறைமுக மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் கப்பலிலேயே 2 பேரும் தனிமைபடுத்தப்பட்டு, கடற்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை குறித்த இருவரிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கிண்டி கிங்ஸ் நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும் அதன் முடிவு இன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.