இறுதிப் போரில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைபிசேர்ந்த 43 வயதான ஜெயந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதி வன்னிப்போரில் கடுமையான காயத்திற்கு உள்ளான இவர் கடந்த 10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அத்துடன் அவருக்கு புற்றுநோயும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மரணமடைந்த முன்னாள் போராளிக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.