செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக $250 Millionயை ( சுமார் 5,000 கோடி ரூபா ) வழங்கவுள்ள டிக்டாக் நிறுவனம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக $250 Millionயை ( சுமார் 5,000 கோடி ரூபா ) வழங்கவுள்ள டிக்டாக் நிறுவனம்!

1 minutes read

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக முழுவதும் அதிகளவில் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் $250 Million ( சுமார் 5,000 கோடி ரூபா ) கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக கொடுக்கவுள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதை தடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் உள்பட உலக நாடுகளும் கடுமையாக போராடி வருகின்றன.

உலகம் முழுவதும் அதிக பயனாளர்களைக் டிக்டாக் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த செயலி மீது இளைஞர்களுக்கு அதிக மோகம் உள்ளது. இந்தச் செயலியை எதிர்ப்பவர்களும் உண்டு. இச் செயலி பல சமூக சீர்கேட்டிற்கு காரணமாகவும் உள்ளது. இந்நிலையில் மருத்துவ பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் நிவாரணங்களுக்காக $150 Million ( சுமார் 3,000 கோடி ரூபா ) நிதி வழங்கப்படும்.

மேலும் மற்றொரு $40 Million ( சுமார் 800 கோடி ரூபா ) , டிக்டாக்கின் பல்வேறு பயனர் சமூகங்களின் குழு பிரதிநிதிகளுக்கு சேவை செய்யும் அமைப்புகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படவுள்ளது. ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக பாதிக்கப்பட்ட கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு $10 Million ( சுமார் 2000 கோடி ரூபா ) வழங்கப்படும் என கூறியுள்ளது. அதனை தொடர்ந்து உலகெங்கிலும் தொலைதூர கற்றல் முயற்சிகளை ஆதரிக்க படைப்பு கற்றல் நிதிக்கு மற்றொரு $50 Million ( சுமார் 1,000 கோடி ரூபா ) பயன்படுத்தப்படும் என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிதி அமெரிக்காவிலுள்ள நோய்கள் கட்டுப்பாட்டு மையங்கள், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி மற்றும் தென் கொரியா உள்ளிட்ட கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு செலவு செய்யப்படவுள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

-வணக்கம் இலண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More