இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டிற்காகவும், தங்களின் பிள்ளைகளுக்காகவும் சுகாதார பிரிவு வழங்கும் ஆலோசனைகளை கடைப்பிடித்து செயற்படுமாறு சுகாதார அமைச்சர், பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு சட்டம் பல மாவட்டங்களில் தளர்ப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இலங்கையில் இருந்து நீங்கியதனை போன்றே பல இடங்களில் மக்கள் செயற்படுகின்றனர்.
சில இடங்களில் முச்சக்கர வண்டியில் 3, 4 பேர் பயணிக்கின்றனர். சில இடங்களில் சமூக இடைவெளிகள் இல்லாமல் செயற்படுகின்றார்கள். இந்த ஊரடங்கு சட்டம் மக்களுக்காக எடுக்கப்பட்ட செயற்பாடாகும். எனவே ஆலோசனைகளை பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.