0
கண்ணே நீ என் அருகிருந்தால்
கனவென்றொன்று வருவதில்லை
என் கண்ணில் உந்தன் நினைவிருந்தால்
கண்கள் என்றும் நனைவதில்லை
என்னோடு உந்தன் முகம் இருந்தால்
எனக்கு என்றும் தனிமை இல்லை
என்னுள் உந்தன் உயிர் இருந்தால்
எந்தன் மூச்சு நிற்பதில்லை
ஊரும் நதி போல் நீ இருந்தால்
என் உள்ளத்தின் ஈரம் காயாது
தூவும் மழையாய் நீ வந்தால்
துன்பம் கூட விலக்குமடி
வானில் நிலவாய் தெரியுதங்கே
உன் வட்ட முகத்தின் ஒளி அழகு
காலை வந்த பூக்களிலும்
கண்டேன் உந்தன் கவி அழகு
அழகே தமிழே என் மொழியே
அந்த நதியில் துயிலும் வெண் நிலவே
என் கவியில் உயிர்த்த கற்சிலையே
காதல் கொண்டேன் காவியமே.
பா.உதயன் ✍️