ஏர்பிஎன்பி என்ற நிறுவனம் சுற்றுலா செல்பவர்களுக்காக விடுதிகளில் அறைகள் பதிவு செய்து கொடுப்பது, வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொடுப்பது ஆகிய தொழிலை உலகின் பல்வேறு நாடுகளில் செய்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம் ஆயிரத்துத் தொள்ளாயிரம் பேரைப் பணியில் இருந்து நிறுத்த உள்ளது.
கொரோனா பரவலால் கோடிக்கணக்கானோர் முன்கூட்டித் திட்டமிட்டிருந்த பயணங்களை ரத்து செய்தனர்.இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையில் பணியாளர்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரம் பேரைப் பணியில் இருந்து நீக்க உள்ளது.
பணியில் இருந்து நிறுத்தப்படுவோருக்கு 14 வார ஊதியமும், அத்துடன் அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு வார ஊதியம் கூடுதலாகவும் வழங்கப்படும் என ஏர்பிஎன்பி தெரிவித்துள்ளது.