இலங்கையிடம் உள்ள முறையான மற்றும் வலுவான சுகாதாரத் துறை உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது முன்னணியில் உள்ளது என்றும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நாடுகளில் இலங்கை தெற்காசியாவிலேயே முன்னிலையில் உள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் அதற்கு உடனடியாக செயற்பட்டு முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் MSN தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில், கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிகரமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
நோயாளிகளை கண்டுபிடித்து, அவர்களை தனிமைப்படுத்துவதிலும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் இலங்கை வெற்றிகரமாக உள்ளதெனவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.