கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றியீட்டியதன் பின்னரே பாடசாலைகள் மீளத்திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொரோனாவுடனான போராட்டத்தை முடித்து நாங்கள் பாடசாலைகளை மீளத் திறப்போம். மாணவர்களை மீண்டும் பாடசாலைகளுக்குக் கொண்டு வருவோம்.
போராட்டத்தின் ஆரம்பமும் போராட்டத்தின் முடிவும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது தொடர்பிலேயே இருக்கின்றது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் நாங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளோம். மாணவர்களின் பாதுகாப்பு நூறு வீதம்
உறுதிப்படுத்தப்பட்டால்தான் நாங்கள் மாணவர்களைப் பாடசாலைக்குக் கொண்டு செல்வோம் என தெரிவித்துள்ளார்.