இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சகல நிறுவனங்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு, பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
ஏதாவது ஒரு நிறுவன பிரதானி அனைத்து ஊழியர்களையும் பணிக்கு அழைக்கும் அவசியம் ஏற்பட்டால் அதற்கு எவ்வித தடையும் இல்லை என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து ஊழியர்களையும் அழைத்து வருவது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களில் அதிகமானோர் கடந்த 3 மாத காலங்களாக வீட்டில் உள்ளதாகவும், இனி அவ்வாறு இருப்பதற்கான அவசியம் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் பொது போக்குவரத்து சேவை வழமையை போன்று இயங்கும் என்பதனால் அரச ஊழியர்களின் போக்குவரத்து தொடர்பில் பிரச்சினை ஏற்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.