நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஜுன் மாதம்29ஆம் திகதி திறக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
13ஆம் 11ஆம் மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களே பாடசாலைக்கு வருவதற்கு முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பாடசாலை ஆரம்பிக்கும் நடவடிக்கை 4 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
முதல் கட்டமாக ஜுன் மாதம் 29ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி ஊழியர்களே பாடசாலைக்கு வர வேண்டும்.
அவர்களால் பாடசாலைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை உட்பட அனைத்து விடயங்களும் ஆரம்பிப்பதற்கு தயாராக வேண்டும்.
இரண்டாவது கட்டமாக ஜுலை மாதம் ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பாடசாலை நடவடிக்கைகள் இயங்கும். இதன் போது 13, 11 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள்.