அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரும்வரை தினமும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஜூன் 14 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தினம்தோறும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச மற்றம் தனியார் துறை நிறுவனங்களில் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.