இராணுவத்தினரால் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோமென அனைத்துலக மனித உரிமை சங்கத்தின் ஜெனிவா பிரதிநிதி சீவரத்தினம் கிரி தாசன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஜூன் மாத கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நேற்று நான்காவது நாளாக இடம்பெற்றது.
இதன்போது, பேரவை முன்றலில் இடம்பெறும் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட வரும் வெளிநாட்டவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே சீவரத்தினம் கிரி தாசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற 43 ஆவது கூட்டத் தொடர், கொரோனா காரணமாக ஒரு வாரத்துடன் இடைநிறுத்தப்பட்டது.
இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட நிகழ்வுகளே தற்போது நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் 44 ஆவது கூட்டத் தொடருக்கான நிகழ்வுகள் குறித்து இன்று நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தீர்மானிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.