குருநாகல் – நாரம்மல பகுதியில் நீரோடையொன்றில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்று (21) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாரம்மல பகுதியை சேர்ந்த 47 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சுமார் 80 அடி ஆழமான நீரோடையில் குளிக்கச் சென்ற போதே இவர் உயிரிழந்துள்ளார்.
உயிரழந்தவரின் உடலை மீட்பதற்கு கிராம மக்கள் பல முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை.எவ்வாறாயினும் இன்று (22) காலை கடற்படையினரின் முயற்சியால் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.