விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார்.
கோப்ரா படத்துக்காக விக்ரம் முழுமையாக தனது தோற்றத்தை மாற்றி உள்ளார். இதில் 15 தோற்றங்களில் அவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது.
இந்நிலையில் கோப்ரா படத்தின் முதல் பாடல் தும்பி துள்ளல் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. ஜூன் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பாடலை வெளியிட உள்ளனர். இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.