இலங்கையில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவினால் சற்று முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் அமுலாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் முறையாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
ஜுன் மாதம் 13ஆம் திகதி முதல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.