நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பயிலும் பிள்ளைகளின் தந்தையை போல் எண்ணியே தான் கல்வியமைச்சராக செயற்பட்டு வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறை ஊருபொக்க பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் பயிலும் மாணவர்களின் தந்தையாகவே நான் கல்விமைச்சர் நாற்கலியில் அமர்கின்றேன். முதலில் பாடசாலை பிள்ளைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்குமாறு நான் ஜனாதிபதிக்கு பிரதமருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
கொரோனா வைரஸ் தொற்று பிள்ளைகளுக்கு பரவாத ஒரே நாடு இலங்கை மாத்திரமே. கொரோனா வைரஸ் தொற்றுவதில் இருந்து பாடசாலை பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டனர் என டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.