அரசாங்கத்தினால் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதியாளர்களால் பெரிய வெங்காய கொள்கலனுக்குள் மறைத்து மஞ்சள் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென சுங்கம் தெரிவித்துள்ளது.
பெரிய வெங்காய கொள்கலனின் நடுப்பகுதியில், மஞ்சள் தொகையை மறைத்து நாட்டிற்கு கொண்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் பிரதி ஊடகப் பேச்சாளர் சுங்க அதிகாரி லால் வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கொள்கலன்களை தடுத்துவைத்து பரிசோதனைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.