பிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்குகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 48 ஆயிரத்து 105 பேருக்கு தொற்று ஏற்பட்டதாக பிரேசிலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்களையும் சேர்த்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 96 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து ஏற்பட்ட இரண்டாவது அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இது என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
கடந்த 19 ஆம் தேதி அதிகபட்சமாக 54 ஆயிரத்து 771 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இறப்பு எண்ணிக்கை 61 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது.