3
எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அந்தவகையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிக்க முடியும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
முன்னர் காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் வாக்களிப்பதற்கு காலம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.