நமது உடம்பில் ஏதேனும் ஒரு பிரச்சனை உருவாவதற்கு, முன்பே நமது உடல் உறுப்புகளில் ஏதேனும் ஒருசில அறிகுறிகள் தென்படும்.ஆனால் அவ்வாறு தென்படும் அறிகுறிகள் சாதாரணமாக இருந்தாலும் கூட அதை நாம் கவனிப்பது மிகவும் அவசியமாகும்.
எனவே நமது உடம்பின் முக்கியமான உறுப்புகளில் எந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சிறுநீரகம்
சிறுநீரகம் நமது உடலின் மிகவும் முக்கியமான உறுப்பாகும். அதில் இருந்து வெளிப்படும் சிறுநீரானது, அடந்த மஞ்சள் நிறம், அதிகமான துர்நாற்றம், அடிக்கடி சிறுநீர் மற்றும் சிறுநீருடன் ரத்தம் வெளிப்படுதல் இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
பற்கள்
அன்றாடம் நாம் பற்களை துலக்கும் போது, ஈறுகளில் ரத்தம், பற்சிதைவு, பற்கள் உடைந்து போவது, வாய் துர்நாற்றம் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தமாகும்.
நகங்கள்
நமது விரல் அல்லது கால்களின் நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது, திடீரென நகம் உடைதல், இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், உடம்பின் அதிகப்படியான செல்கள் இறந்து, பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் தாக்கம் அதிகரித்து உள்ளது என்று அர்த்தமாகும்.
சருமம்
நமது உடம்பில் ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அது நமது சருமத்திலே தெரிந்து விடும். அந்த வகையில் நமது சருமத்தில் கரும்புள்ளி, தடித்தல், அதிகமான அரிப்புத் தன்மை, வறட்சியான சருமம் இது போன்று தென்படும் அறிகுறிகளுக்கு உடனே மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
முடிகள்
நமது முடிகள் சாதாரண நிறத்தை விட திடீரென நிறம் மாறினாலோ அல்லது அதிகப்படியான முடி வறட்சி அடைந்து, அதிக முடி உதிர்வு ஏற்பட்டாலோ அந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுக்காமல் மருத்துவ பரிசோதனை செய்வது மிகவும் நல்லது.
உடல் துர்நாற்றம்
சிலருக்கு அக்குளில் அதிகப்படியாக வியர்த்து, அது கடிமையான துர்நாற்றமாக வெளிப்படும் இந்த அறிகுறிகளை கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது, ஏனெனில் இது உடல் ரீதியான வேறு ஒரு பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
உடல் பருமன்
நமது உடலில் திடீரென உடல் எடை அதிகரித்தால், அது இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களின் அறிகுறியாகும். அதுவே திடீரென உடலில் எடை குறைந்தால், அது செரிமான மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனையின் அறிகுறிகளாகும்.