கிழக்கு மாகாண சபையில் சிங்கள தலைவர்கள் முதலமைச்சராக இருப்பதை விரும்பவில்லை என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
நாவிதன்வெளி பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல பிரயத்தனங்களை முன்னெடுத்து இருந்தது. இதனை அடுத்து ஒரு சிங்களவர் கூட முதலமைச்சராக வந்தால் பரவாயில்லை என்பதற்கான பல பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தோம் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் தயா கமகே அவர்களுடன் அந்தப் பேச்சுவார்த்தையில் அவர் சம்மதம் தெரிவித்திருந்தார். அவர் சம்மதம் தெரிவித்திருந்த போதிலும் அவரோடு இருந்த ஏனைய உறுப்பினர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நாங்களும் மாகாணசபையில் 11 உறுப்பினராக இருந்த காலத்தில் தமிழர்கள் எந்த ஒரு விடயமானாலும தொடர்ந்தும் அந்த அரசினால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தான் நாங்கள் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து மாகாண சபையை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நன்று சிங்களத் தரப்பினர் நம்முடன் இணைந்து செயற்பட்டு இருந்தால் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து மாகாணசபையை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.
தற்போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்வர் அங்குள்ள மண்ணையும் மக்களையும் பெற்றுப் பிழைத்து விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தல் முடியவில்லையாம் நான் தர முயற்சி தருகின்ற என்ற போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த காலங்களிலே எங்களுக்காக உழைக்கின்ற கட்சிக்காக ஓரணியில் என்ற வரலாறு உண்டு தற்போது ரம்மி சீரழிக்கின்றது பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது இந்த பிரச்சாரங்களில் இருந்து எமது மக்கள் தெளிவுகளை பெற்று உங்களுடைய தமிழ்த்தசியக் கூட்டமைப்பின் வெற்றியைத் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு உதவி செய்யவில்லை என்றால் நமது நிலைமை கேள்விக்குறி ஆக்கப்படும்.எனவே அந்த நிலைமையில் இருந்து தான் இந்த பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் எமக்கு ஒரே ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்து வருகின்றது அவ்வாறான பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக பிற மாவட்டங்களில் இருந்து சிலரை இறக்குமதி செய்து எம்மீது போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாவிதன்வெளி பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களைப் பெற்றது இக்காலகட்டத்தில் எமது பிரச்சாரங்கள் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்காவிட்டால் மாற்று சமூகத்தினர் கையேந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எம் மக்களிடம் வலியுறுத்தி இருந்தோம்.
இவ்வாறான சூழ்நிலையில் சுயேட்சைக் குழு சார்பில் மீன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் பிரதிநிதிகள் மூன்று பேர் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது ஆட்சியை பங்கீடு செய்வதற்காக அந்த சுயேச்சை குழுவுடன் நாங்கள் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இருந்தோம். அந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்காத போது தான் நாங்கள் முஸ்லிம்களுடன் இணைந்து நாவிதன்வெளி பிரதேச சபை வழிநடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த மாகாண சபையில் 11உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களுடன் ஆட்சியதகாரத்தை ஒப்படைத்துள்ளதாக இங்கு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. கடந்த 2012 ஆம் ஆண்டு மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தில் 11 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது.
அந்த மாகாணசபையில் முதலாவது பிரேரணையாக இந்த அரசாங்கம் முன்வைத்த விடயம் திவிநெகும சட்டம். இந்தத் தீவிநெகும சட்டம் என்பது மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கான சட்டம். இந்தத் திவிநெகும சட்டம் என்பது மத்திய அரசினால் எம்மீது திணிக்கப்பட்ட ஒரு அதிகாரம் இவ்வாறு அதிகாரங்களை மத்திய அரசு திணிக்க முற்பட்ட வேளை எமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நீதிமன்றம் சென்று தடை உத்தரவை பெற்றிருந்தார்.
இவ்வாறு இந்த சட்டம் மீது திணிக்கப்பட்டு இருந்தால் பல்வேறு அரசியல் பின்னடைவுகளை இன்னும் சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறான சூழ்நிலையில் அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு மாகாண சபை உறுப்பினரும் இந்த திவிநெகும சட்டத்துக்கு எதிராக போராடவில்லை அவர்கள் அந்த தீவினைகளை சட்டத்தை ஆதரித்திருந்தனர்.
ஐக்கிய நாடு சபையில் தமிழர்களது பிரச்சினையை பிரஸ்தாபிக்க சென்றபொழுது பெரும்பான்மை சக்திகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவதாக கூறி கல்முனை நகரில் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து இருந்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்டங்களை ஐக்கிய நாடுகள் சபையில் தமிழர்களுக்கு ஆதரவாகப் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக கல்முனையிலிருந்து தமிழர்கள் கொதித்தெழுந்து இருக்கின்றார்கள் செய்திகள் வெளியிடப்பட்டன.
அந்த சந்தர்ப்பத்தில் கூட மஹிந்த தரப்பு அரசாங்கத்தால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த முடியவில்லை அதன் பின்னரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மூன்றே நாளில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என்று கூறியவர்கள் அன்று எத்தனை மாதங்கள் ஆகின்றது இவ்வாறுதன் இவர்களது ஏமாற்று வித்தைகள் அமைந்திருக்கும் இதற்கு பின்னால் இளைஞர்கள் ஒரு போதும் அணி திரள கூடாது என்பதனை இங்கு வலியுறுத்தினார்.