தில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’ .விஜய் சேதுபதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.இந்த படத்திற்கு பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது சன் டிவி.
படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை சமீபத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வழங்கியது. 35 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், மீதம் உள்ள 40 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் திரைப்படத்திலிருந்து ஒர்க்கிங் ஸ்டில்களும் வெளியாகி ட்ரண்டிங்கில் இருந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள பார்த்திபன் அவருக்கே உரிய பாணியில் ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார். அவருடைய பதிவில் , நானும் ரவுடிதான் , நீயும் ரவுடி தான். இன்னைக்கு உன் துக்ளக் தர்பார் எவ்வளவு பெரிய லெவல்ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா அப்படீங்கற ரேஞ்சுக்கு கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம் ? உன் மாஸ்டர் பிளான் தான் என்ன என்று அந்தப்பதிவில் குறிப்பிட்டு இருவரும் இணைந்திருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் இருந்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.