சிலாபம் முந்தல் வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திலுஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அந்த வைத்தியசாலைய மூட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிலாபம் மாரவில பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை வைத்தியசாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.