இலங்கை நாடாளுமன்ற தேர்தல், ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஹம்பன்தொட்டாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பங்கேற்றார்.
அதில் ஹம்பன்தொட்டா அருகே எனது கிராமத்தில் உள்ள மாத்தளை சர்வதேச விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வந்தது.
அந்த விமான நிலையத்தை இலங்கையுடன் சேர்ந்து இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு சிறிசேனா-ரணில் விக்ரமசிங்க அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நானும், என் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் இந்தியாவுக்கு சென்றிருந்தபோது, மாத்தளை விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். எங்கள் வேண்டுகோளை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதனால்தான், விமான நிலையத்தை காப்பாற்ற முடிந்தது.