கொரோனா வைரசை கட்டவிழ்த்துவிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தான் பேச விரும்பவில்லை’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சீனா தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை எனவும், வைரஸ் பரவலை மறைத்து அதை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட முழுப் பொறுப்பு சீனாவிற்கு உள்ளது என குறிப்பிட்டார்.
சீனா நினைத்து இருந்தால் கொரோனா பரவலை தடுத்து இருக்கலாம் ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை என்றும், உலக சுகாதார அமைப்பும் சீனாவின் கைப்பாவையாகத்தான் இருந்திருக்கிறது என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.