ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்று உறுதியாக சொல்வதற்கில்லை என்று அதே பல்கலைக்கழகத்தின் தடுப்பூசித் துறை பேராசிரியர் சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த கட்ட சோதனைகளிலும் இந்த தடுப்பூசியின் வெற்றியை பரிசோதிக்கும் தேவை உள்ளதாக அவர் கூறினார்.
தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்வதுடன், அவசரகால பயன்பாட்டுக்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிக நபர்களிடம் கொரோனா தடுப்பூசியை சோதித்து பார்க்கும் முன் இந்த 3 நடவடிக்கைளையும் செய்து முடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாராக இருந்தாலும், பிரிட்டனில் தொற்று பரவல் குறைந்துள்ளதால், அதை சோதித்துப் பார்ப்பதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.