ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் அவரை முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவிப்பு விடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக இரண்டு தடவைகள் அவருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.எனினும் குறித்த சந்தர்ப்பங்களில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை.
இதனையடுத்து இது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இந்த அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது